தொடர்புடைய செய்திகள்
- தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று முளைத்த மழைக்காளான்! அமைச்சர் ஜெயகுமார்
- சாலை விபத்துகளை தடுக்க உயர் மின் விளக்கு கோபுரங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
- திமுகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏவின் சகோதரர்: தினகரன் அதிர்ச்சி
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன டிடிவி – தங்க தமிழ்ச்செல்வனுக்கு அட்வைஸ் !
- ஓபிஎஸ்-ஐப் புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி – இந்த இருவருக்குதான் முக்கியத்துவம் !
”சாக்லெட்டை காட்டியவுடன் ஏமாற நாங்கள் குழந்தைகள் அல்ல”..ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்
பதவிகளுக்காக ஆசைப்பட்டு அதிமுகவிலிருந்து யாரும் திமுகவிற்கு போகமாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து யாராவது வருவார்களா என கதவை திறந்து வைத்து காத்திருக்கிறார். அப்படி வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்க தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதை” என கூறினார்.
மேலும் அந்த பேட்டியில், எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா வழி வந்தவர்களாகிய அதிமுகவினர் ஒரு போதும் திமுகவிற்கு போகமாட்டார்கள். திமுக ஒரு தீய சக்தி என்று எம்.ஜி.ஆர். உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்” என திமுகவின் மீது கடும் விமர்சனத்தை வைத்தார்.
அடுத்த கட்டுரையில்
