வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (08:52 IST)

ஓபிஎஸ்-ஐப் புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி – இந்த இருவருக்குதான் முக்கியத்துவம் !

வெளிநாடு சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வரை தொடர்பு கொள்ளாமல் வேறு இரு அமைச்சர்களைதான் தொடர்பு கொண்டு விவாதிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் சென்றனர். இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வராக யாரையும் நியமிக்காமல் சென்றார் முதல்வர். அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்ஸிங் மூலம் முக்கியமானப் பணிகளை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அங்கிருந்தபடியே அரசியல் நிலவரம் மற்றும் கட்சி சார்பான விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ விட அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரைதான் அதிகமாக தொடர்பு கொள்கிறாராம். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.