செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (13:41 IST)

சாலை விபத்துகளை தடுக்க உயர் மின் விளக்கு கோபுரங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க விரைவில் அமைக்கும் பணி துவங்க உள்ளது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சாலை விபத்துகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில் போக்குவரத்துறை நிதியிலிருந்து சாலை பாதுகாப்பு துறை சார்பில் விபத்துக்கள் நடக்கும் இடங்களில் உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாவட்டம் முழுவதும் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் அமைக்கப்படும் என்றும், இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை மிகவும் குறையும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் செம்மடை, வெண்ணமலை, வீரராக்கியம், உள் வீரராக்கியம், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். 4 உயர்மட்ட மேம்பால பணிக்காக ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மீதமுள்ள நான்கு இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும்., இப்பகுதி மக்களுக்கு போதிய காவிரி நீர் வரவில்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆற்றின் நடுவே மிக ஆழமான கிணறு தோண்ட பட்டு நீருந்து மோட்டர் என்கின்ற சம்ப் மூலமாக மூன்று பஞ்சாயத்துகளுக்கு நேரடியாக காவிரி நீர் வழங்கப்படும். அதற்காக தமிழக அரசு முப்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. அதேபோல் பண்டுதகாரன்புதூர் பகுதியில் இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட நிலத்தடி தொட்டி அமைத்து மண்மங்கலம் பகுதிகளுக்கு விடப்படும். இதனால், மண்மங்கலம் பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இனி இருக்காது என்று பேசினார்.