திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (20:16 IST)

தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று முளைத்த மழைக்காளான்! அமைச்சர் ஜெயகுமார்

அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து பிரபலமாக பார்ப்பதாக சமீபத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி குற்றம்சாட்டியிருந்தார் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினை விமர்சனம் செய்துதான்,  நான் பிரபலமாக வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்தான் என்னை விமர்சித்து பிரபலமாகி வருகிறார் என்றும் கூறினார் 
 
 
மேலும் தமிழச்சி தங்கபாண்டியன் புதிதாக முளைத்த மழைக்காளான் என்றும் அவரும் பிரபலமாகவே என்னை விமர்சனம் செய்கிறார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார்  குற்றம் சாட்டினார்
 
 
மேலும் இந்த பேட்டியில் 'இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், தமிழகத்தில் உற்பத்தியும் நுகர்வோரும் சரிசமமாக இருப்பதால் இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார் 
 
மேலும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு யாராவது ஓடி வருவார்கள் என்று ஸ்டாலின் கனவு காண்பதாகவும், இதில் அவர் ஏமாந்து விடுவார் என்றும், பதவி ஆசை காட்டினால் அமமுகவில் இருந்து வேண்டுமானால் ஆசைப்பட்டு சிலர் ஓடி வரலாம் என்றும்,  ஆனால் அதிமுகவில் இருந்து யாரும் ஒருபோதும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்