1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Jayakumar comments on Udhayanidhi Stalin

உதயநிதிக்கு வயசுக்கு மீறிய பேச்சு... ஜெயகுமார் ஆதங்கம்!

ஜெயகுமார்
உதயநிதி வயதுக்கு மீறிய விமர்சனம் செய்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்திய பேட்டியில் பேச்சு. 
 
திமுக இளைஞர் அணி செயளாலர் ஆக பொருப்பேற்ற ஒரு ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் உதயநிதி ஸ்டாலின், இந்த லாக்டவுன் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமவை ஓரம்கட்டிவிட்டு இப்போது அரசியலே பிரதானம் என இருந்து வருகிறார். 
 
இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கமாக டிவிட்டரில் அதிமுகவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவர் முதல்வர் வேட்பாளருக்கு போட்டிப் போட்டுக்கொள்கின்றனர். இவர்கள் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டாலும் திடீரென இருவரும் இணைந்து பாஜக உறுப்பினரை கூட முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்க வாப்புள்ளது என விமர்சித்தார். 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார், உதயநிதி ஸ்டாலின் வயதுக்கு மீறிய விமர்சனம் செய்கிறார். அரசியல் பண்பாடு தெரியாமல் தரக்குறைவாக பேசுகிறார் என விமர்சித்துள்ளார். இதற்கு முன்னர் இருவரும் சாக்லெட் பாய், ப்ளே பாய் என பரஸ்பரம் கிண்டல் அடித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
இது தீர்ப்பு மாதிரி இல்ல.. தீர்மானம் பண்ணுன மாதிரி இருக்கு! – திருமாவளவன் சந்தேகம்!