வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (14:02 IST)

ஆட்சி இருக்கும் வரையிலே இந்த ஒற்றுமை: ஆனந்த்ராஜ் பளிச்!

ஆட்சி இருக்கும் வரை அதிமுகவில் ஒற்றுமை இருக்கும் என நடிகர் ஆன்ந்த்ராஜ் அதிமுகவில் நடப்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
அதிமுகவில் டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். ஆட்சி இருக்கும் வரை அதிமுகவில் ஒற்றுமை இருக்கும், கடைசி ஒரு மாததத்தில் என்னவெல்லாம் நடக்கபோகிறது பாருங்கள். எதிர்பார்த்ததும் நடக்கும், எதிர்பாராதததும் நடக்கும். 
 
அதிமுக தொண்டர்கள் அநாதையாக இருக்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்களே மகிழ்ச்சியாக உள்ளனர். அதிமுகவின் தொண்டனாகவே இதை நான் சொல்கிறேன். சசிகலாவை முன்னிறுத்தியதும் இவர்கள் தான், விலக்கிவைத்ததும் இவர்கள் தான். எனவே மக்கள் எதைத்தான் நம்புவார்கள் என தெரிவித்துள்ளார்.