1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2020 (10:03 IST)

குண்டுராவுடன் சந்திப்பு; வந்தது ஸ்டாலினின் கொரோனா ரிசல்ட்!

ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்துவர்களும், சந்திப்பில் ஈடுப்பட்டவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டதாக தெரிகிறது. இதன் முடிவும் தற்போது வெளியாகியுள்ளது. 
 
ஸ்டாலினுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. சமீபத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டு ஸ்டாலின் சர்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது ஆறுதல் தகவலாக உள்ளது.