செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (12:38 IST)

பாபர் மசூதி இடிப்பு விவகாரம்; அனைவரும் விடுவிப்பு! - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லையென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி, கல்யாண்சிங், உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 28 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நேரடி பார்வையில் சிபிஐ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

வழக்கு தொடரப்பட்ட 32 பேரில் அத்வானி உள்ளிட்ட 6 பேர் காணொளி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். மற்றவர்கள் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல என்றும், அது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக எந்த சாட்சிகளோ, ஆதாரங்களோ சமர்பிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ள நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய 32 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.