திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (14:05 IST)

10 தொகுதிகளுக்கு சம்மதித்து விட்டதா காங்கிரஸ்? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படாது என தெரிகிறது. திமுக தனித்து ஆட்சியமைக்க 200 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் குறைந்தபட்சம் 180 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் தெரிகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையிலேயே தொகுதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 60 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதலமைச்சர் பதவி என்ற கனவில் இருந்த காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் குண்டுராவ் தமிழக விஜயத்திற்கு பின்னர் மாறி உள்ளதாக தெரிகிறது 
 
தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸின் பலம் கிட்டத்தட்ட தமிழக பாஜக அளவுதான் இருக்கிறது என்றும் தனியாக போய் எதையும் சாதிக்க முடியாது என்ற இயல்பு நிலையையும் காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே முடிந்த வரை போராடி திமுக கொடுக்கும் தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு கூட்டணியில் இருக்கலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
 
எனவே திமுக ஒதுக்கும் 10 அல்லது 15 தொகுதிகள் மட்டும் வாங்கிக்கொண்டு எந்த பிரச்சனையும் செய்யாமல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்று கூறப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மதிமுக போன்ற கட்சிகளுக்கு இரண்டு அல்லது நான்கு தொகுதிகள் மட்டுமே  திமுக திட்டமிட்டுள்ளதாகவும், எனவே அந்த கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது