1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Metro Train stops its working on 22nd march as self curfew

சென்னையில் மெட்ரோ சேவை ரத்து!!

சென்னை
வரும் மார்ச் 22 ஆம் தேதி சென்னை மெட்ரோ இயங்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ரன. 
 
இந்நிலையில் நேற்று மக்களிடையே தொலைக்காட்சி வழியாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பாதுகாப்பு ஒத்திகையாக எதிர்வரும் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு விதிமுறையை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 
இதனை ஏற்றுக்கொண்டு தமிழக வணிகர் சங்கமும், பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சுய ஊரடங்கு ஒத்துழைக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது மெட்ரோ நிர்வாகம் சுய ஊரடங்கு அறிவித்துள்ளதால் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இந்த ஊர்ல ஒரு ஆணியும் புடுங்க முடியாது... Sanitizer விலையால் கடுப்பான பாலா!!