இந்த ஊர்ல ஒரு ஆணியும் புடுங்க முடியாது... Sanitizer விலையால் கடுப்பான பாலா!!

Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 20 மார்ச் 2020 (17:55 IST)
சானிட்டைசர் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து வருத்தத்தோடு தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் பாலா. 

 
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
மேலும், கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கையாக மக்கள் சானிட்டைசர், முக கவசங்கள் போன்ற மருத்துவ பொருட்களை வாங்க கடைகளில் அலை மோதுகின்றனர். இதை சாதகமாக கொண்டு பல கடைகள் அதிக விலைக்கு இதனை விற்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
 
இதை குற்றசாட்டை முவைத்துதன காமெடி நடிகர் பாலா தனது சமூக வலைத்தளப்பக்கமான டிவிட்டர் ஒரு வீடியோவை வெளிட்யிட்டுள்ளார். அந்த வீடியோவில் சானிட்டைசர் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து வருத்தத்தோடு தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 
 
சானிட்டைசர், கை கழுவும் சோப், முக கவசம் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் இது போன்று சம்பவங்கள் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :