வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (14:44 IST)

ஊரடங்கு நடக்கும்போது வீடில்லாதவர்கள் கதி?? நீதிமன்றம் புதிய உத்தரவு!

இந்தியாவில் கொரோனா பரவி வரும் நிலையில் ஞாயிறன்று ஊரடங்கு செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் வீடு இல்லாதவர்கள் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு தொலைக்காட்சி வாயிலாக மக்களோடு பேசினார். அப்போது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மக்களே செயல்படுத்த வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் வணிக அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஊரடங்கு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு அறிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டில்லாமல் தெருக்களிலும், நடைமேடைகளிலும் வாழும் மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது.

சென்னை மாநகர பகுதிகளில் வாழும் வீடற்ற மக்கள் ஊரடங்கின்போது சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான உணவையும் மாநகராட்சி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.