1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold Rate decreased compare than yesterday

தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம்

Tamilnadu
கடந்த வாரத்தில் பெரும் விலை உயர்வை சந்தித்த தங்கம் விலை தற்போது மெல்ல குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் தற்போது விலை மெல்ல சரிவை சந்தித்து வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து ரூ.30,672க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.34 குறைந்து ரூ.3,834-க்கு விற்பனையாகி வருகிறது.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் ஷாப்பிங் செல்வதை தவிர்த்து வருவதால் நகைக்கடைகள் வெறிச்சோடி காணப்படுவதாக வியாபாரிகள் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா எதிரொலி: 168 ரயில் சேவைகள் ரத்து