அப்பாவை காணோம்!. விஜய் பண்ணதுல என்ன தப்பு?.. நிர்மலா சீதாராமன் ஆதரவு!..
nirmala vijay
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்களுக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய் திமுக எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்திருப்பதாக பேசினார். ஆனால், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லாத நிலையில் அவரையும் அவரின் மகன் உதயநிதியையும் ஒப்பிட்டுதான் விஜய் இந்த கதையை சொன்னதாக பார்க்கப்பட்டது. இது திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின் இப்படியெல்லாம் பேச வேண்டாம்.. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவரை தேடும் மனைவி பற்றி கதை எல்லாருகும் தெரியும் என்று விஜயை பர்சனலாக அட்டாக் செய்தார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் விமர்சனத்தை சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும்? எதிர்கட்சியும் பதில் சொல்லட்டும்.. ஆளும் கட்சியும் பேசட்டும்.. அதில் ஒன்றும் தப்பில்லை என்று சொல்லியிருக்கிறார்..
