1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk minister viswanathan reply to controversy

தப்பா பேசாதீங்க!.. மயங்கிய சிறுமிகளுக்கு உதவி செய்தேன்!.. அமைச்சர் விஸ்வநாதன் கோபம்!...

viswanathan
ராகுல் காந்தியின் 56-வது பிறந்த நாள் விழா, தமிழக முதலமைச்சர் விஜயின் 52வது பிறந்தநாள் விழா ஆகியவற்றை முன்னிட்டு மதுரை மேலூரில் புகையிலை, போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ViRa விழிப்புணர்வு மராத்தான் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது.

அதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். கடும் வெயிலில் ஓடியதால் சில சிறுவர், சிறுமிகள் மயக்கமடைந்து கீழே படுத்து விட்டார்கள். அப்போது அங்கிருந்த தவெக அமைச்சர் விஸ்வநாதன் சிறுமிகளுக்கு தண்ணீர் கொடுத்ததோடு, அவர்களின் கால்களை நீவி விட்டு அவர்களுக்கு முதலுதவி செய்தார்.

ஆனால், திமுகவினர் இதை மோசமாக விமர்சித்தனர். அமைச்சரின் செயலை இழிவுபடுத்தும் வகையில் திமுக ஐடி விங்கும் மிகவும் தரம் குறைந்து கருத்து தெரிவித்திருந்தது. சிறுமிகளிடம் விஸ்வநாதன் அநாரிகமாக நடந்து கொண்டதாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஐஜிக்கு வக்கீல் சரண்யா நடராஜன் என்பவர் மனு அளித்தார்.

இதில் கொதிப்படைந்த அமைச்சர் விஸ்வநாதன் ‘கடும் வெயிலில் மரத்தான் போட்டியில் மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். மயங்கிய சிறுமிகளுக்கு மனிதாபமான உணர்வோடு தொட்டு தூக்கி முதலீடு செய்தேன். இழிவான பதிவுகளை வெளியிட்டு தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடும் திமுக எக்காலத்திலும் விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது.. கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?