இந்தியாவை ஃபாலோ பண்ணனும்!.. பாராட்டிய டொனால்ட் டிரம்ப்!..
தேர்தல் நடத்துவதில் அமெரிக்கா இந்தியாவை பின்பற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப் இந்த மாத துவக்கத்தில் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ஒரு கேள்வி எழுப்பினார். முறையான அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்த முடியும்? என அவர் கேட்டார். அதில் நியாயம் இருக்கிறாது.
இந்தியாவில் 64.6 கோடி வாக்காளர்கள் முறையான புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள். அதுபோல, அமெரிக்க வாக்காளர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்கு Save America Act மிகவும் அவசியம். அமெரிக்க தேர்தல்களில் ஒட்டளிக்க பதிவு செய்யும் நபர்கள் அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். இந்த புதிய சட்டத்தின் மூலம் குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
