1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. parthiban says udhyanidhi stalin can be permanent cm

இத மட்டும் செஞ்ச நீங்கதான் நிரந்தர சி.எம்!.. உதயநிதியிடம் பார்த்திபன் சொன்னது என்ன?..

parthiban
தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. கடந்த முறை திமுக ஆட்சியில் இருந்த நிலையில் அந்த கட்சி தற்போது எதிர்கட்சியாக மாறிவிட்டது. திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினின் மகன் உதயநிதி எதிர்கட்சி தலைவராகிவிட்டார்.

தவெக ஆட்சி அமைந்தது முதலே உதயநிதி முதல்வர் ஜோசப் விஜயையும், தவெக அமைச்சர்களையும் மிகவும் நக்கலடித்தே பேசி வருகிறார். அதோடு, விஜயை மிகவும் ஆபசமாக பேசியதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து தஞ்சாவூர் வரை அழைத்து சென்று அதன்பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். சட்டசபையிலும் தவெகவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து உதயநிதி பேசி வருகிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ‘உதயநிதி பேசுறதுல நிறைய புத்திசாலித்தனம் இருக்கு. நான் அவர்கிட்டயே சொன்னேன். நீங்க உங்க தாத்தா மாதிரி கொஞ்சம் விஷயத்தை செய்றீங்க.. அப்படியே கொஞ்சம் எம்.ஜி.ஆர அதுல சேர்த்தீங்கன்னா கடைசி வரைக்கும் நீங்கதான் சி.எம்-னு சொன்னேன். அவருக்கு இருக்க அறிவு, புத்திசாலித்தனத்தோடு கொஞ்சம் மனிதாபிமானம், மக்கள் பசி, இது எல்லாத்தையும் பாக்குற மாதிரி கருணாநிதி, எம்.ஜி.ஆரையும் கலந்தா நீங்கதான் சி.எம்.-னு சொன்னேன்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
முதல்வர் விஜய்யின் சுதந்திர தின உரையில் விடுபட்ட ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. அமைச்சர் கீர்த்தனா அதிருப்தியா?