1,600 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மத்திய அரசு அனுமதி.. மாஸ் காட்ட போகும் ரிலையன்ஸ் ஜியோ...
மத்திய அரசின் விண்வெளி ஒழுங்குமுறை ஆணையமான இன்-ஸ்பேஸ், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மெகா திட்டத்திற்கு அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் செயற்கைக்கோள் மூலமான இணைய சேவை வழங்கும் முயற்சிக்கு, விண்வெளியில் சுமார் 1,600 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மத்திய அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மெகா திட்டத்தின் மூலம், இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை கொண்டு சேர்க்க ஜியோ திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' மற்றும் அமேசானின் 'புராஜெக்ட் குய்பர்' போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குப் போட்டியாக, இந்தியாவிலேயே சொந்தமாக ஒரு மாபெரும் செயற்கைக்கோள் நெட்வொர்க் கட்டமைப்பை உருவாக்கும் முகேஷ் அம்பானியின் இந்த முயற்சிக்கு இந்த அனுமதி மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பத் துறையில் ஜியோவின் இந்த அதிரடி பாய்ச்சல், இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் அடுத்தகட்ட புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த அதிரடி அனுமதி, உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப வர்த்தகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்பதால் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இந்தத் தகவல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
Edited by Siva
