1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. many wants to return to admk again from tvk

தவெகவுக்கு போனவங்க அதிமுகவுக்கு திரும்பி வராங்க!. எஸ்.பி.வேலுமணி பேச்சு..

sengottaiyan
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய முதலே திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அதன்பின், சமீபகாலமக அதிமுகவையும் விமர்சிக்க துவங்கினார்.. அதிமுக ஒரு ஊழல் கட்சி..  பாஜகவுக்கு அந்த கட்சி அடிமையாக இருக்கிறது, எம்ஜிஆர், ஜெயலலிதாவை வளர்த்த கட்சியை அதிமுக அடகு வைத்து அடிமையாக மாறிவிட்டது என்கிற ரீதீயில் பேசி வருகிறார்.

ஆனாலும் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியது அதிமுக.. ஏனெனில் விஜய் எப்படியும் தங்களுடன் கூட்டணிக்கு வருவார் என எடப்பாடி பழனிச்சாமி நினைத்தார்.. ஆனால் நடக்கவில்லை என்று தெரிந்ததும் விஜயை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க துவங்கினார். கரூர் சம்பவத்தை வைத்து மட்டுமே விஜயை அதிமுக விமர்சித்து வருகிறது.

ஒரு அதிமுக பொதுக்கூடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ‘விஜய் எனக்கு நண்பர்தான். ஒருமுறை அவரின் படம் ரிலீஸாகாமல் பிரச்சனை ஏற்பட்டபோது என் வீட்டில்தான் தங்கியிருந்தார்.. என் காரிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் அவரை அழைத்துச் சென்று பேசி படத்தை ரிலீஸ் செய்ய எல்லா உதவிகளையும் செய்தேன். அது வேறு. அரசியல் வேறு.. ஆனால் ஒரு அரசியல் தலைவர் என்று உங்களை நீங்கள் சொல்லிக் கொள்ளும்போது மக்களின் உயிரை நீங்கள் காப்பாற்ற சென்றிருக்க வேண்டும்.. சொந்தகட்சிக்கே நீங்கள் செல்லவில்லையென்றால் என்ன தலைவர்?.. கரூரில் 41 பேர் இருந்தபோது அங்கே செல்லாமல் சென்னைக்கு போன விஜய் திரும்பி வரவே இல்லை’ என பேசினார்.

மேலும்,  அதிமுகவிலிருந்து தவெகவுக்கு போன பலரும் இப்ப மறுபடியும் அதிமுக வரேன்னு கேட்குறாங்க. ஏன்னா இங்க இருக்கும் மகிழ்ச்சி வேறு கட்சியில் இருக்காது. தவெகவுக்கு ஓட்டு போட்டா அது செல்லாத ஓட்டுதான். அது ஆபத்தாக மாறிவிடும்.. மரியாதையும், பதவியும் கொடுத்தா திரும்பி அதிமுகவுக்கே வந்துடுறேன்னு சொல்றாங்க. நான் பெயரை சொல்ல விரும்பவில்லை’ என கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
கரூர் சம்பவம்.. விஜயை என் காரில் அழைத்து சென்றேன்.. எஸ்.பி.வேலுமணி பேட்டி...