அண்ணா என்னை பழிவாங்கணுமா?!.. விஜய்க்கு சவால் விட்ட ஜூலி..
சமீபத்தில் வேலூரில் பேசிய தவெக தலைவர் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார்.. அதில் ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை ஒரு சிறுவன் புல்லுக்கட்டை காட்டி அடக்கியதாக சொல்லியிருந்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான நடிகை ஜூலி ஒரு வீடியோவை வெளியிட்டார்..
அதில், விஜய் அண்ணா நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வாங்கி தந்திருக்கிறோம்.. அதைக் கெடுத்து விடாதீர்கள்.. நீங்கள் சொன்ன கதையை கேட்டு சின்ன பசங்க போய் ஏதாவது ஆயிடபோது என்று நக்கலாக பேசியிருந்தார். இதையடுத்து தவெக ஆதரவாளர்களும், விஜய் ரசிகர்களும் அந்த வீடியோவுக்கு கீழே போய் அவரை திட்டி கமெண்ட் போட்டார்கள்.
விஜய் ரசிகர்கள் பலரும் அவரை மிகவும் தரக்குறைவாகவும், ஒருமையிலும், நக்கலடித்தும் விமர்சித்தார்கள் இந்நிலையில், தற்போது இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ள ஜூலி விஜய் அண்ணா நான் போட்ட வீடியோவுக்கு உங்கள் ரசிகர்கள் எவ்வளவு கீழ்த்தரமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பதை உங்களுக்கு நேரம் இருந்தால் என் கமெண்ட் பாக்ஸில் போய் பாருங்கள்.. இதுதான் அவர்கள் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை..
இந்த மைனர் பசங்க ஃபேக் அடியில் இருந்துதான் பேசுறாங்க. என்ன மட்டுமில்லாமல் என்னை சேர்ந்தவர்களையும் திட்டுகிறார்கள். ஆனால் என்னை திட்டுவது மக்களை திட்டுவது போல என யாரையும் இழுத்து விடமாட்டேன்.. என்னை திட்டினா என்ன திட்டின மாதிரிதான்.. நீங்க என்னை பழிவாங்கணும்னா நான் வீட்ல இருப்பேன். இல்ல ஆபிஸ்ல இருப்பேன்.. இல்லனா நானே பனையூருக்கு வரேன் என்று அதில் பேசியிருக்கிறார். இதையடுத்து, அந்த வீடியோவுக்கு கீழேயும் விஜய் ரசிகர்கள் ஜூலியை திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்..