1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. velmurugan said dmk is angry with him

விஜயுடன் டான்ஸ்!. எங்க வருமானம் வருதோ அங்கயே போங்க!. கோபப்பட்ட உதயநிதி!...

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி எல்லா மேடைகளிலும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். திமுகவை திட்டுவதற்கென்று அரசியலுக்கு வந்தது போல அந்த கட்சியை பற்றி மட்டும் கோபமாக பேசி வருகிறார் விஜய். கேட்டால் தற்போது ஆட்சியில் இருப்பது திமுகதான்.. மற்ற கட்சிகளை பற்றி இப்போது ஏன் பேச வேண்டும். நேரம் வரும்போது பேசுவோம் என கூறினார்.

எல்லா மேடைகளிலும் திமுகவை தீய சக்தி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்.. இது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.. விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார் என்பதாலும், அவருக்கு இளைஞர்களிடம் வரவேற்பு இருப்பதாலும் முதல்வர் ஸ்டாலினும், அவரின் மகன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் விஜயின் பெயரை எங்கும் சொல்லாமல் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு தவெக மூன்றாவது தொடக்க விழா நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன் விஜயுடன் இணைந்து நடனம் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சமீபத்தில்
தமிழக அரசுக்கான சிறந்த பாடகர் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது.

அதன்பின் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பாடகர் வேல்முருகன் ‘விருது வாங்கியதும் அமைச்சர் சேகர் பாபு ‘ உங்க ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பார்த்தோம் நன்றாக இருந்தது ஆனால் உங்கள் மேல் ஒரு வருத்தம் இருக்கு’ என சொன்னார். அதை கேட்டு எனக்கு சங்கடமாகிவிட்டது.. அருகில் இருந்த உதயநிதி ‘எங்க வருமானம் வருதோ அங்கயே போக வேண்டியதுதானே’ என கூறினார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது உடனே அவர் சிரிச்சுக்கிட்டு நீங்க எல்லோருக்கும் பொதுவான உடனே எனக்கு தெரியும் என்று சொல்லி அந்த சூழ்நிலையை எளிதாக்கினார் என கூறியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆபாச ஓடிடி தளங்களுக்கு தடை!.. மத்திய அரசு அதிரடி...