மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு!..
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தபின் அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். அதன் காரணமாக அந்த ஏழு தொகுதிகள் காலியாக இருக்கிறது. அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாகவே தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் அந்த இரண்டு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தவெகவை பொறுத்தவரை முதலமைச்சர் ஜோசப் விஜய் தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களில் பேசியதோடு அந்த இரண்டு தொகுதியில் உள்ள பல கிராமங்களுக்கும் நேரில் சென்று ரோட் ஷோ செய்து மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்..
அதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஆகியோரும் அந்த தொகுதிகளுக்கு சென்று வாக்குகள் சேகரித்தனர். இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றியும் தவெகவுகு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆளும் தவெக மீது எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை வைக்கும் நிலையில் மக்களின் ஆதரவு தவெகவுக்கு இருக்கிறதா என்பது இந்த இரண்டு தேர்தல் முடிவுகளிலும் தெரிந்து விடும். தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, அதிமுக சார்பில் பானுமதி, திமுக சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்..
அதேபோல் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன், அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் மதுராந்தகம் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மதுராந்தகத்தில் 285 வாக்கு சாவடிகளிலும், தாராபுரத்தில் 320 வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது, மதுராந்தகம் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 36 வாக்காளர்களும் இருக்கிறார்கள்.
இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதேபோல், வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்போனுடன் வாக்குச்சாவடிக்குல் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போல் வைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.