1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. librarary union leader says this happens everyday

எல்லா வருசமும் இந்த முறைகேடு நடக்குது - நூலக சங்கத் தலைவர் அதிர்ச்சி பேட்டி

librarary union leader
கடந்த திமுக ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் ரூ.240 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. அதை முதல்வர் விஜய் திறந்துவைத்தார். ஆனால், அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களில் பல போலியானவை, போலியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தின் பேரில் பல ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவும், அந்த புத்தகங்களில் பல தவறான தகவல்களும் இடம் பெற்றுள்ளன, ஏஐ மூலம் தகவல்களை எடுத்து அதை பதிவிட்டுள்ளனர் என எழுத்தாளர் பெருமாள் முருகன் சமீபத்தில் புகார் கூறினார்.

இதற்கு திமுகதான் காரணம் என தவெகவும், தவெகதான் காரணம் என திமுகவும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. நூலகத்தை அமைத்தது திமுக என்றாலும் ஜூன் மாதம் நிறைய புத்தகங்களை தவெக அரசு கொள்முதல் செய்திருக்கிறது. அதில்,  அகல் விளக்கு என்கிற போலி பதிப்பகத்தின் பெயரில் நிறைய புத்தகங்கள் இருக்கிறது. மேலும், புத்தகங்களில் உள்ள எழுத்தாளர்களின் பெயர்கள் விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்யன், சுமேகா விஜய் என இருக்கிறது. எனவே, இதை செய்தது தவெக என திமுகவினர் சொல்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நூலக சங்கத் தலைவர் துறை தியாகராஜன் ‘ஒவ்வொரு வருடமும் நடைபெறும் புத்தக கொள்முதலில் பல கோடி முறைகேடுகள் நடக்கிறது. புத்தகத் தேர்வில் பழைய பதிப்புகளை கலந்து அனுப்பி மோசடி செய்துள்ளனர். 5 முதல் 10 ஆண்டு பழைய புத்தகங்களை கலப்படம் செய்து அனுப்புகிறார்கள். ஒவ்வொரு முறையும் 2 கோடி வரை ஊழல் நடக்கிறது.. தவெக ஆட்சிக்கு வந்தபின் புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: 81,000-க்கு கீழ் சரிந்து முடிந்த சென்செக்ஸ், 25,000-க்கு கீழ் நிஃப்டி!