அதிமுகவுக்கு இது போதாத காலம் போல. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக கூட அதிமுக அமர முடியவில்லை. தமிழக அரசியலில் அதிமுக 3வது இடத்திற்கு சென்று விட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அதிமுக நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. எனவேதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் 24 பேர் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்ததோடு சட்டசபையில் முதல்வர்...