1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. karunas blame tvk leader vijay

விஜய் முதல்ல தமிழனா இருக்கணும்!... பொரிந்து தள்ளிய கருணாஸ்!...

karunas
நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டும், பேசியும் வருகிறார்,கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்திருந்த போது அதில் முக்கிய பங்கு வகித்தார் கருணாஸ். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதும் அவர் ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

விஜய் அரசியலுக்கு வந்தபின் அவரைப் பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார் கருணாஸ். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் ‘திமுகவை  தீயசக்தி என விஜய் சொல்கிறார்.. அப்படி என்றால் அவர் என்ன சக்தி?.. பாஜக என்ன சக்தி?.. என்று பேச மாட்டேன் என்கிறார்.. அதிமுக என்ன சக்தி?.. இதையெல்லாம் அவர் சொல்ல வேண்டும்.

ஐந்து வருடங்கள் நான் அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன். அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு தெரியாதா? இன்று சட்டமன்றத்தை ஆளுநர் அமவரியாதை செய்திருக்கிறார். நான் ஒரு சாதாரண சின்ன நடிகன்.. ஆனால் அதை எதிர்த்து நான் பேசுகிறேன்..

ஆனால் விஜய் பேச மாட்டேன் என்கிறார். முதலில் அவர் தமிழனாக இருக்க வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பேச வேண்டும்.. அமைதியாக இருப்பது என்ன அரசியல்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
சென்னை வரும் மோடி!.. சிவப்பு மண்டலமாக மாறிய சென்னை!.. பரபர அப்டேட்!..