1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. karunas comment about tvk leader vijay

வாய திறக்கமாட்டாரா?!.. டப்பிங்கில் மட்டும்தான் பேசுவாரா விஜய்?!.. கருணாஸ் விளாசல்...

karunas
நடிகர் விஜய் அரசியல்வாதியாக மாறிய பிறகும் நடிகராக இருந்தது போலவே அமைதியாகவே இருக்கிறார். பொதுக்கூட்டங்களில் மட்டும் திமுகவை விமர்சித்து கத்தி பேசுகிறார். மற்ற நேரங்களில் அவர் இருக்கும் இடமே தெரியவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரம் முதல் பல மக்கள் பிரச்சனைகளை பற்றி விஜய் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேபோல் அவரின் ஜனநாயகன் திரைப்படம் சென்சாரில் சிக்கி பிரச்சனையை சந்தித்து வருவது பற்றியும், சிபிஐ விசாரணையை தற்போது அவர் சந்தித்து வருவது பற்றியும் இதுவரை எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அதேபோல், அரசியலுக்கு வந்தபின்னரும் அவர் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை. இது தொடர்பான எந்த அறிக்கையும் அவர் வெளியிடவில்லை.

பொதுவாக முக்கியமான சம்பவங்களில் வீடியோ வெளியிடுவார் விஜய். ஆனால் ஜனநாயகன் தொடர்பாக அவர் இதுவரை எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இது தொடர்பாக செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த நடிகர் கருணாஸ் ‘விஜய் எல்லாவற்றிற்கும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்..

டப்பிங்கில் மட்டும்தான் அவர் வாயை திறப்பார் போல.. பாஜக வருமானவரித்துறை அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை போல தணிக்கை துறையையும் தன் கையில் வைத்துக்கொண்டு விளையாடி வருகிறது. விஜய்க்கு அழுத்தம் கொடுத்து அவரை தங்களின் கூட்டணியில் இழுக்கத்தான் பாஜக அவரை சீண்டி வருகிறது’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
23ம் தேதி மோடியின் பொதுக்கூட்டம்!.. டிடிவி தினகரன், பிரேமலதா பங்கேற்பார்களா?!...