1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kamal attack vijay in dmk meeting

கூட்டமெல்லாம் குடும்பமா மாறிடாது!.. விஜயை அட்டாக் பண்ணிய கமல்!...

kamal
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பவர் விஜய்.. விஜய்க்கு முன்பு எம்ஜிஆர், சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த் என பலரும் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.. இவர்கள் எல்லோருமே சொந்தமாக அரசியல் கட்சி துவங்கினார்கள். ஆனால், இவர்கள் எல்லோராலும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை..

தேமுதிக கட்சியை துவங்கிய விஜயகாந்த் மட்டும்தான் இதில் எதிர்கட்சி தலைவர் வரை சென்றார்.. அவருக்கு மக்கள் ஓரளவு ஆதரவு கொடுத்தார்கள்.. ஆனால் உடல்நிலை காரணமாக அவரால் அரசியலில் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. விஜயகாந்த் பின் தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்..

இடையில் நடிகர் கமல் அரசியலுக்கு வந்தார்.. திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அவராலும் அரசியலில் வெற்றியை பெற முடியவில்லை.. கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், திமுக கூட்டத்தில் பேசிய கமல் ‘இங்கு பெரும் கூட்டம் கூடியிருக்கிறது.. எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.. ஒரு விபத்தும் இல்லை.. கூட்டம் நடத்துவதற்கு இது ஒரு முன் உதாரணம்.. வழி தவறி போக வேண்டாம்.. கூட்டம் எல்லாம் குடும்பமாகிவிடாது. அது கலைந்து விடும்.. திராவிட குடும்பம் 75 வருடம் கட்டி காத்த குடும்பம்’ என்று விஜயை மறைமுகமாக விமர்சித்து பேசியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வெயில்ல சுத்தி விஜய் இப்படி கருத்துப்போயிட்டாரே!.. போட்டோ பாத்து ஃபீல் பண்ணும் ரசிகைகள்!...