1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bottle thrown in tvk meeting today in ayanavarm

தவெக கூட்டத்தில் கண்ணாடி பாட்டில் வீச்சு!.. ஆதவ் அர்ஜுனா ஆவேசம்.. இருவர் கைது!...

vijay
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்ய துவங்கிவிட்டன.. வீட்டை விட்டு வெளியே வராத விஜய் கூட நேற்று பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. இந்த தேர்தலில் தவெக தனித்து நிற்பதால் திமுகவின எதிர்ப்பு ஓட்டுக்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில்தான் ஆதவ் அர்ஜுனா நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட அயனாவரம் தவெக கூட்டத்தில் சிலர் கண்ணாடி பாட்டில்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. நாஞ்சில் சம்பத் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது மொட்டை மாடியிலிருந்து சிலர் கண்ணாடி துண்டுகளை வீசினர். அது மேடையில் இருந்து சில தவெக பெண் நிர்வாகிகள் மீது விழுந்ததாக சொல்லப்படுகிறது..

இதில் கோபம் அடைந்த ஆதவ் அர்ஜுனா மைக்கை பிடித்து ‘இதை செய்வது திமுகதான். முதல்வர் ஸ்டாலின் சார்.. எல்லாத்தையும் உடனே நிறுத்துங்க.. எவ்வளவுதான் எங்களை அடிப்பீங்க.. நாங்க பொறுமையா இருக்கோம்.. திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க.. கண்ணாடி பாட்டில் வீசியவர்களை இன்று இரவுக்குள் கைது செய்ய வேண்டும்.. இல்லன்னா இங்கிருந்து போக மாட்டேன்.. நாங்கள் இங்கே அமருவோம்’ என ஆவேசமாக கத்தினார். அதன்பின் கண்ணாடி தூளை வீசிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கச்சா எண்ணெய் வேணுமா?.. இந்த 2 விஷயத்தை பண்ணுங்க.. இனிமே அமெரிக்கா உதவி கிடைக்காது!.. டிரம்ப் ஐடியா!