TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..
தமிழக அரசியலில் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அரசியல் மாற்று சக்தியாக உருவாகி வருகிறது. தவெக தனித்து போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை வாங்கும் என காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.. அதேபோல் விஜய்க்கு இளைஞர்களிடம் நிறைய ஆதரவு இருக்கிறது என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சமீபத்தில் கூறினார்..
இது எல்லாம்தான் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் தஞ்சையில் இன்று நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசவிருக்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 தவெக நிர்வாகிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.. வழக்கம் போல் QR Code ஸ்கேன் மூலம் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவுள்ளனர். தஞ்சாவுர் செங்கிப்பட்டி அருகேவுள்ள அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கர் இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மதியம் 12 மணி முதல் 4 மணி வரை பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.. சேலத்தை போல் அல்லாமல் வேலூரில் நடந்தது போல நிர்வாகிகள் அமர்வதற்கு இருக்கைகளும், மேற்கூரையும் அமைக்கப்பட்டிருக்கிறது. தவெகவுடன் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை..
தேர்தலும் ஒருபக்கம் நெருங்கி வருகிறது.. அதோடு ஒரு பக்கம் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.. இந்த சூழ்நிலையில்தான் விஜய் தஞ்சாவூரில் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.. வழக்கம்போல் திமுகவை விமர்சித்து போசுவதோடு, தஞ்சாவூர் என்பதால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளையும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.