1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. women killed his husband for two crore insurance

2 கோடி காப்பீடு எடுத்துவிட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..

murder
2 கோடி ரூபாய் காப்பீடு பணம் மற்றும் கள்ளக்காதல் ஆகிய காரணத்தால் மனைவியே கணவனை கொலை செய்து விபத்து என நாடகமாடிய சம்பவம் தெலுங்கானாவில் நடந்திருக்கிறது. தெலுங்கானாவில் குடிபெட் பகுதியில் வசித்து வந்தவர் சைனி குமார். இவருக்கு வயது 45.

இவர் கடந்த 22ஆம் தேதி ஒரு சாலை ஓரத்தில் அடிபட்டு கீழே கிடந்தார். ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். துவக்கத்தில் போலீசார் இது சாலை விபத்து நினைத்தார்கள். ஆனால் விசாரணையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பது பெரிய வந்திருக்கிறது..

இது தொடர்பாக அவரின் மனைவி பாரதியை போலீசார் கைது செய்தனர்.. விசாரணையில் பாரதிக்கு ஒருவருடன் கள்ள தொடர்பு இருந்து வந்திருக்கிறது. எனவே கள்ளக்காதலனோடு இணைந்து இரண்டு கூலிப்படையை சேர்ந்த இருவரையும் இணைத்துக் கொண்டு கணவனை அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் எல்லோரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
கணவனை கொலை செய்து சாலையில் போட்டுவிட்டு விபத்து என நாடகம் நடத்தி போலீசாரை நம்ப வைத்து இரண்டு கோடி ரூபாய் காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம் எனவும் பாரதி திட்டமிட்டது தெரியவந்தது.
அடுத்த கட்டுரையில்
கோடை வெயில்!. இதையெல்லாம் செய்யுங்க!.. பிரதமர் மோடி அட்வைஸ்!..