1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy given letter to tn speaker

அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது!.. சபாநாயகருக்கு பழனிச்சாமி நெருக்கடி!...

eps vijay
தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி கொண்ட 24 எம்எல்ஏக்கள் சி.வி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர். அதோடு தமிழக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது அவர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அந்த 24 எம்எல்ஏக்களில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்து விட்டு தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனை சந்தித்து அவர்கள் மூவரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

ஆனால், இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மூவரின் ராஜினாமா ஏற்கக்கூடாது என பழனிச்சாமி தரப்பு வலியுறுத்து திட்டமிட்ட நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் சட்டமன்ற தொகுதிகள் காலி என தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியானது.  

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள்  அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பத்துரை உள்ளிட்ட சிலர் சந்தித்து 3 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை நீங்கள் ஏற்கக்கூடாது என கூறி அது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்கள்.  இதையடுத்து சட்டமன்ற செயலருடன் சபாநாயகன் ஜேசிடி பிரபாகர் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
About Writer
பாலகிருஷ்ணன்