1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. judgement on sathankulam issue

சாத்தான் குளம் தந்தை, மகன் வழக்கில் இன்று தீர்ப்பு!..

sathankulam
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரையும் 2020ம் வருடம் காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் அதிகாரிகள் தாக்கியதில் அவர்கள் மரணம் அடைந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து. அதன்பின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐ ரவி கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்..

கடந்த 23ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார்.. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகள் என அவர் அறிவித்தார்.மேலும் சிறையில் இருக்கும் போது 9 பேரின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கைகளையும் வருகிற 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 30ம் தேதியான தண்டனை உறுத்செய்யப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும் என்னென்ன தண்டனை என அறிவிக்கப்படவிருக்கிறது.. அநேகமாக இன்று மதியம் அவர்களுக்கான தண்டனை விபரம் வெளியாகும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
சீமானிடமே சோதனையா?!.. அவரு மாட்டல!.. நீங்கதான் அவர்கிட்ட மாட்டுனீங்க!.. பறக்கும்படையை வச்ச செஞ்சிட்டாரே!...