தொடர்புடைய செய்திகள்
- பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..
- பெண்களுக்கு மாசம் ரூ.2500.. வேலையை துவங்கிய முதல்வர் விஜய்!..
- விஜய் பிரதமராகும் வாய்ப்பிருக்கு!. அவர் ஜாதகம் அப்படி!. 30 வருஷத்துக்கு அவர்தான்!.. ராதன் பண்டிட் பேட்டி.
- விஜய்க்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை!.. நானும் அவரும் அப்பா - மகன் போல!.. ராதன் பண்டிட் பேட்டி..
- விஜய் சி.எம். ஆவதை தடுக்க உதயநிதியும், பழனிச்சாமி மகனும் பேசினாங்க!.. ஆதவ் அர்ஜுனா பகீர்!..
சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....
கடந்த சில நாட்களாகவே ஊடகங்களிலும் பத்திரிகைகளும் அடிபட்ட பெயர் ரிக்கி ராதன் பண்டிட். பிரபல ஜோதிடரான இவர் கடந்த சில வருடங்களாக தவெக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஜோதிட ஆலோசனைகளை கூறி வருவதாக சொல்லப்படுகிறது. அதோடு, முதல்வர் விஜயின் தனி சிறப்பு அதிகாரி பதவியை அவருக்கு கொடுத்ததால் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்தது. இதையடுத்து அவரின் நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரிக்கி ராதன் பண்டிட் பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
எல்லோரும் நினைப்பது போல விஜய்க்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை எல்லாம் கிடையாது.. எனக்கும் அவருக்கும் இருப்பது ஒரு அப்பா - மகன் உறவு மட்டுமே.. விஜய்க்கு பிரதமராகவும் வாய்ப்பு இருக்கிறது. இன்னும் 20 - 30 வருடங்களுக்கு அவர் அரசியலில் நிலைத்திருப்பார்.. என்னை பற்றி பலரும் தவறாக பேசுகிறார்கள்.. நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன்.
என் சொந்த ஊர் ஊத்துக்குளியில் கேட்டு பாருங்க.. மூணு மாதம் சுடுகாட்டில் தூங்கியிருக்கிறேன்.. கஷ்டப்பட்டாலும் நான் தவறு செய்ததில்லை.. ஜோதிடத்திற்காக 25 ஆயிரம் பெண்களை சந்தித்திருப்பேன். யாரிடமும் சகோதரி என்கிற உறவை தாண்டி வேறு மாதிரி நான் நடந்து கொண்டதில்லை.. என் மீது எந்த வழக்கும் இல்லை. ஒருவரை பற்றி தெரியாமல் தவறாக பேசக்கூடாது. ஒவ்வொருத்தர் வாழ்க்கையை திரும்பி பார்த்ததினாலும் அதுல சோகமும், வலியும், அசிங்கமும் இருக்கும்.. அதையெல்லாம் கடந்து நான் ஜெயிச்சிருக்கேன்.. அத பாருங்க என அவர் பேசியிருக்கிறார்.