வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2026 (19:00 IST)

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

police
எவ்வளவு கடுமையான சட்டங்கள் போட்டாலும் சிறுமிகள் மற்றும் பெண்களின் மீது பாலியல் அத்துறல் நடப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் பெண்கள் அதிக அளவு பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.. வடமாநிலங்களில் இது மிகவும் அதிகம்..

அதேபோல் கடந்த சில வருடங்களாகவே தமிழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் அத்திமீறல் அதிகரித்திருக்கிறது.. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் எல்லோருக்கும் தண்டனை கிடைப்பதில்லை என்பதுதான் சோகம்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் சூர்யா என்பவர் சீருடை அணிந்தபடி மதுபோதையில் அந்த பெண்ணிடம் அத்துமீறியிருக்கிறார்.

சூர்யாவை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியில் ஓடி வந்து உதவி கேட்டு அந்த பெண் அலற பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.. ஆனாலும் இதுவரை அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் கூறியிருக்கிறார்கள்..