1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy comment about tvk vijay

விஜய்க்கு ஒன்னும் தெரியல.. இவர் ஒரு தலைவரா?!.. எடப்பாடி பழனிச்சாமி ராக்ஸ்!...

eps vijay
தமிழக வெற்றிக் கழகம் துவங்கி இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடந்தது.. அந்த விழாவில் பேசிய விஜய் ‘ஒரு தீய சக்தி.. ஒரு ஊழல் கட்சி.. ஒரு டபுள் இன்ஜின்.. ஒரு டப்பா இன்ஜின்’ என்றெல்லாம் விமர்சித்தார்..

அவர் ஏற்கனவே திமுகவை தீய சக்தி என்று சொல்லிவிட்டால் ஊழல் கட்சி என சொல்வது அதிமுகவைத்தான் என பலரும் புரிந்து கொண்டனர். இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘விஜய்க்கு எதுவும் தெரியவில்லை.. வீட்டிலேயே இருந்து கொண்டு எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கிறார்.. வெளியே வந்தால்தான் உண்மை புரியும்.. செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னதால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அவருக்கு புரியும்..

கரூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்து 72 நாள் கழித்துதான் அவர் வெளியே வந்தார்.. அவர் எல்லாம் ஒரு கட்சித் தலைவரா?.. விஜய் ஊழல் கட்சி என்று யாரை சொல்கிறார் என்பதை தெரியவில்லை.. எங்களின் கட்சி பெயரை அவர் சொல்லவில்லை.. ஒருவேளை அதிமுக என்று குறிப்பிட்டால் நாங்கள் பதில் சொல்வோம்..

அதிமுக ஊழல் கட்சி இல்லை.. ஜெயலலிதா என் ரோல் மாடல் என சொல்லியிருக்கிறார். அதிமுகவிலிருந்து ஒருவர் கிளம்பி தவெகவுக்கு போனாரே அவர்தான் (செங்கோடையன்) ஊழலில் சிக்கி சிறை சென்று அதன்பின் வெளியே வந்தார்’என்று சொல்லியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
தவெகவுடன் பேச்சுவார்த்தை?.. காய் நகர்த்தும் சசிகலா!.. விஜய் சம்மதிப்பாரா?...