1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. joseph vijay changing the ministers list soon

ராஜ்மோகனுக்கு செல்கிறதா நிதித்துறை?!.. அதிரடி மாற்றங்களை பண்ணும் விஜய்?....

mariya wilson
2026 தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சரானதும் ராஜ்மோகன், செங்கோட்டையன், மரிய வில்சன், ஆதாவ் அர்ஜுனா, ரமேஷ், என்.ஆனந்த் உள்லிட்ட சிலருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதில் சில விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக மரிய வில்சனுகுக் நிதித்துறையை கையாளத் தெரியவில்லை என திமுக குற்றம் சாட்டியது..

ஒரு பக்கம் அமைச்சர் சரத்குமார் விளையாட்டு மைதானத்தில் வெள்ளை நிற பவுடர் போல ஒன்றை  கையில் வைத்திருந்த வீடியோ வெளியாஅந்தால் அது போதைப்பொருள் என திமுக புகார் சொல்லியது. ஆனால், சரத்குமார் அதை மறுத்தார். எனவே, இன்னும் சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம் நிகழும் என செய்திகள் வெளியானது..

இந்நிலையில்தான், நிதித்துறையை சமாளிக்க முடியாமல் தடுமாறும் மரிய வில்சனுக்கு தொழில் துறை அளித்துவிட்டு கீர்த்தனாவுக்கு சமூக நலத்துறை அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதே போல் அமைச்சர் ராஜ்மோகனிடம் இருக்கும் பள்ளி கல்வித்துறையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறை அமைச்சர் வேளச்சேரி குமாருக்கு கொடுத்துவிட்டு ராஜ்மோகனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மின்துறை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது..

அதோடு, முதல்வர் விஜய் வசமுள்ள நகராட்சி நிர்வாக துறையும் கூடுதலாக ராஜ்மோகனுக்கு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை தொழிலாளர் நலத்துறை ஆகியவை கூடுதலாக ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சென்னையில் புதிய விமான நிலையம்!.. 2 இடங்களை தேர்வு செய்த அரசு!..