1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay going to london on passengers flight

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். முதலமைச்சரான பின் கரூர் வழக்கு தொடர்பாக 2 முறை தனி விமானம் மூலம் அவர் டெல்லி சென்றார்.

அதன்பின் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு தண்னீர் திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வரை சந்திக்க திட்டமிட்டார். ஆனால், அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று இரவு 10 மணியளவில் அவர் லண்டன் செல்கிறார். தமிழக முதலமைச்சரான பின் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது. லண்டனில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல தொழிலதிபர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டுக்கு பல முதலீடுகளை அவர் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது..

பொதுவாக விஜய் முதல்வரான பின் எங்கு சென்றாலும் தனி விமானத்தில் பயணித்து வந்தார். ஆனால் இந்த முறை துபாய் வழியாக லண்டன் செல்லும் பயணிகள் விமானத்திலேயே அவர் பயணிக்கவிருக்கிறார். இன்று இரவு 10 மணிக்கு அவர் லண்டன் செல்லவிருப்பதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு பின் வருகிற 16ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..