1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jayakumar ask murasoli documents to Mk Stalin

மூலப்பத்திரத்தை காட்டுங்க பாப்போம்! – ஸ்டாலினை ஆஃப் செய்த ஜெயக்குமார்!

Tamilnadu
டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து பேசும் மு.க.ஸ்டாலின் முதலில் மூலப்பத்திரத்தை காட்டட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசு வேலை பணியிடங்களுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வி முறைகேடு நடந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 40 பேர் வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு மூலம் அதிமுக அரசின் ஊழல் குட்டு வெளியே தெரிய வந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினிம் கூற்றுக்கு பதிலளிப்பது போல் பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக் காலத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளார். 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என கூறியுள்ள அவர், அதிமுக அரசு இந்த முறைகேடு வழக்கில் வெளிப்படையாக செயல்படுவதாகவும் அதனால்தான் இதுவரை 40 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வளவு பேசும் மு.க.ஸ்டாலின் முதலில் முரசொலி நில மூல பத்திரத்தை காட்டிவிட்டு பேசட்டும்’ எனவும் கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்க கூடாது! – டிக்டாக் பெண்களுக்கு நாட்டாமை ஸ்டைல் தண்டனை!