வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (10:44 IST)

அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்க கூடாது! – டிக்டாக் பெண்களுக்கு நாட்டாமை ஸ்டைல் தண்டனை!

Tiktok
டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண்களை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் மற்றும் இவரது சகோதரி இருவரும் இணைந்து டிக்டாக்கில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். அதற்கு லைக்குகளும், ஃபாலோவர்களும் அதிகமாகவே டிக்டாக் மீது மோகம் ஏற்பட்டு தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதர்கு லைக்குகள் வந்த அளவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

அந்த பெண்களின் டிக்டாக் வீடியோக்களை பார்த்து ஆத்திரமடைந்த நபர் ஒருவர் அவர்களை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த பெண்களை திட்டியது மட்டுமல்லாமல் நாகலாபுரம் கிராமத்து பெண்களையே மொத்தமாக திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பெண்களை இழிவாக பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

மேலும் டிக்டாக் வீடியோ வெளியிட்டு நாகலாபுரம் பெண்கள் அனைவரும் இழிவுக்கு உள்ளாக காரணமாக இருந்த சுகந்தி மற்றும் அவரது சகோதரியை கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். அந்த கிராமத்தில் வேறு யாரும் இதுபோல டிக்டாக் செய்து கிராமத்திற்கு கலங்கம் விளைவிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளதாம். கிராமத்தினரின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.