1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former Minister Vaigai Selvan and Prominent DMK Leaders Shift Loyalty to Vijay's TVK

அதிமுக மட்டுமல்ல.. திமுக விக்கெட்டும் விழுந்தது.. திமுக எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி தவெகவில்..

vijay
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியிருப்பது மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி, பல முக்கியத் தலைவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதுதான். சமீபகாலமாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற கட்சிகளின் முன்னணி புள்ளிகள் தவெக நோக்கி நகர்வது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக, நேற்று பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், அதிமுகவின் மூத்த முகமும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் தவெகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவருடன் திமுகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 
அப்படி தவெகவில் இணைந்த முக்கியப் புள்ளிகள் யார் என்று பார்த்தால், அரக்கோணம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, திமுக இலக்கிய அணி செயலாளராகப் பதவி வகித்து வந்த வி.பி.கலைராஜனும் தவெக பக்கம் ஒதுங்கியுள்ளார். 
 
இவர் ஏற்கனவே அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதியும் தவெகவில் இணைந்து திமுகவிற்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளார். இந்த அடுத்தடுத்த இணைப்புகள் தவெகவின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி தெரியாமல் இடைத்தேர்தல் நடத்த கூடாது: கிருஷ்ணசாமி