1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. it may rain heavily and today and tomorrow

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை!.. வானிலை மையம் அறிவிப்பு...

rain
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை தொடர்பான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது
.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே பெரிய அளவில் மழை இல்லை. இந்நிலையில்தான், வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது..

அதையடுத்து இன்று தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் திடீரென்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.

அதேபோல் 22ம் தேதியான நாளை தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யப்படும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியிருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
திமுகவில் மகனுக்கு சீட்!.. ஓபிஎஸ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. கோபத்தில் ஈபிஎஸ்...