மணமகள் மீது பணமழை பொழிந்த மணமகன்.. ரூ. 8.5 கோடியா? சமூகவலைத்தளங்களில் பரபரப்பு..!
பஞ்சாப் மாநிலம் தரண் தரண் பகுதியில் கடந்த பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகள் மீது ரூ. 8.5 கோடி ரொக்கம் மழையாக பொழியப்பட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவியது.
அந்த வீடியோவில், தரை முழுவதும் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்க, உறவினர்கள் உற்சாகமாக பணத்தை வாரி இறைத்து நடனமாடுவதை காண முடிந்தது.
ஆஸ்திரேலியாவில் லாரி தொழில் செய்யும் மணமகனின் குடும்பத்தினர், இவ்வளவு பிரம்மாண்டமான தொகையை செலவழித்ததாக பலரும் விமர்சித்தனர்.
இருப்பினும், இந்த தகவலை மணமகனின் சகோதரர் சிகந்தர் சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "நாங்கள் மகிழ்ச்சியில் பணத்தை இறைத்தது உண்மைதான், ஆனால் அது வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே. சமூக வலைதளங்கள் இதனை கோடிக்கணக்கில் மிகைப்படுத்திவிட்டன," என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
அந்த திருமணத்தின் ஈவென்ட் மேனேஜர் மற்றும் டிஜே-வும், அங்கு இறைக்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் 4 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளனர்.
Edited by Siva