தொடர்புடைய செய்திகள்
- மாதிரி வாக்குகளை அழிக்கவில்லை – தேர்தல் ஆணையம் மீது அடுத்த புகார் !
- ஐந்து ஓவர் ஐபிஎல் போட்டி: அதிலும் 7 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு
- 205 கிமீ வேகத்தில் காற்று: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை
- ஃபானி புயல் முன்னெச்சரிக்கை – மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு !
- அதிதீவிர புயலாக மாறும் ஃபானி: தப்பியது தமிழகம்
கடலூரில் திடீர் சூறைக்காற்று: இடியுடன் கூடிய மழை
ஃபனி புயல் பாதிப்பு சென்னை உள்பட தமிழகத்திற்கு இருக்காது என்று வானிலை அறிக்கை கூறிய நிலையில் சற்றுமுன் கடலூரில் பயங்கர சூறைக்காற்று வீசியது. மேலும் இடி, மின்னலுடன் கூடிய மழையும் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் பெய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கடலூர் மட்டுமின்றி புதுச்சேரி வில்லியனூர், அரியங்குப்பம், காலாப்பேட் பகுதிகளி்லும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது
மேலும் கடலூரில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வீசிய சூறைக்காற்றால் இந்த மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் இயக்கப்படவிருந்த 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. யஷ்வந்த்பூர் - முசாபர்பூர், சந்திரகாசி, ஹல்டியா, சாலிமர், ஹவுரா ஆகிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், * திருவனந்தபுரம் - சாலிமர், யஷ்வந்தபூர் - ஹவுரா செல்லும் 3 விரைவு ரயில்கள் மற்றும் நாளை மறுநாள் சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் ஆகிய விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
