சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வு – பொதுமக்கள் அதிருப்தி !

Last Modified புதன், 1 மே 2019 (19:57 IST)
சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர்களின் விலையை மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இந்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயுக்களை வழங்கி வருகிறது. ஆனால் சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் போல கேஸ் சிலிண்டர்களின் விலையும் கடந்த ஆறு மாதங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வின் படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றுக்கு சென்னை மற்றும் டெல்லியில் 28 பைசாவும், மும்பை மற்றும் கொல்கத்தாவில் 29 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 484.02 ரூபாயாகவும், டெல்லியில் 496.14 ரூபாயாகவும், மும்பையில் 493.86 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 499.29 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :