ஐந்து ஓவர் ஐபிஎல் போட்டி: அதிலும் 7 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு

Last Modified புதன், 1 மே 2019 (07:45 IST)
நேற்றைய 49வது ஐபிஎல் லீக் போட்டி ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்க தாமதமானது.
பின்னர் மழைவிட்டவுடன் ஐந்து ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது., கேப்டன் விராத் கோஹ்லி 25 ரன்களும், டிவில்லியர்ஸ் 10 ரன்களும் அடித்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட் ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. சாம்சன் 28 ரன்களும், லிவிங்ஸ்டன் 7 ரன்களும் எடுத்திருந்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளி வழங்கப்பட்டது. இந்த போட்டி முடிவில்லாமல் போனதால் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தன.


இதில் மேலும் படிக்கவும் :