பேசும்போது மைக் ஆஃப் பண்ணிட்டாங்க!.. சட்டசபையிலிருந்து ஆளுனர் வெளியேறியதற்கு விளக்கம்!..
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் துவங்கவிருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே ஆளுநர் தனது உரையை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். அதற்கு சட்டசபையில் தேசிய கீதம் ஒலிக்கப்படாததே காரணம் என அவரின் தரப்பில் சொல்லப்பட்டு வந்தது.
கடந்த வருடம் கூட சட்டசபைக்கு தனது உரையை ஆற்ற வந்த ஆளுனர் ரவி தமிழ்தாய் வாழ்த்துக்கு பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கேட்டார்.. ஆனால் அது நடக்காத கோபத்தில் அங்கிருந்து வெளியேறினார்.. எனவே இன்றும் ஆளுநர் தனது உரை வாசிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
சரியாக காலை 9:30 மணிக்கு ஆளுநர் சட்டசபைக்கு வந்தார். அப்போது அவருக்கு சட்டசபையில் முதல்வர் உட்பட அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதன்பின் தேசிய கீதம் ஒலிக்கப்படும் என காத்திருந்தார் ஆளுநர். ஆனால் ஒலிக்கப்படவில்லை. உடனே தனது உரையை வாசிக்காமலேயே ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறிவிட்டார்.
மக்கள் மன்றத்தை ஆளுநர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக முதல்வர் ஸ்டாலினும் சட்டமன்றத்தில் பேசினார். மேலும் ஆளுநர் உரையோடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதில் உள்ள விதியில் மாற்றம் கொண்டு வருவோம் எனவும் கூறி இருக்கிறார். இந்நிலையில், தமிழக அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறு தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்ற விடவில்லை... ஆளுநர் பேசியபோது மைக் அணைக்கப்பட்டது. மேலும், ஆளுநர் உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகளும், உண்மைக்கு புறம்பான தகவல்களும் இருந்தது. 12 லட்சம் முதலீடு எனக்குறிப்பிடப்பட்டிருந்தது தவறு.. தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை மருந்து பழக்கம் அதிகரித்திருக்கிறது. பல ஆயிரம் கோவில்களில் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்படவில்லை. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு மாறியுள்ளது என பல குற்றச்சாட்டுக்களை ஆளுநர் அதில் முன்வைத்திருக்கிறார்.