1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. central government rejected housur airport plan

ஒசூருக்கு ஏர்போர்ட் கிடையாது!.. தமிழக அரசு கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசு!....

hosur
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தொகுதி வேகமாக முன்னேறி வருகிறது. எனவே அங்கு சர்வதேச விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தியது.. ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது பற்றி அறிவித்திருந்தார். இதற்கான வழிமுறைகளையும் பின்பற்றி போக்குவரத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சசகத்திடம் தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது.

ஓசூர் பேரிகை மற்றும் பாகலூருக்கு இடையே சூளகிரி தாலுகாவில் 2300 ஏக்கர் இடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டிருருக்கிறது. வருடத்திற்கு மூன்று கோடி பேர் பயணிக்கும் வகையில் விமான நிலைய அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ஓசூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது ஒன்றிய அரசு.

அப்பகுதியில் உள்ள வான்வழி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கூறி தமிழ்நாடு அரசின் கோரிக்கையில் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு புதிய அதிபர்!.. டொனால்ட் டிரம்ப் போடும் ஸ்கெட்ச்!...