1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. free bus blan will affect local business

வெற்றி பயண திட்டத்தால் வரும் ஆபத்து!.. உள்ளூர் வியாபாரம் பாதிக்குமா?..

free bus
கடந்த திமுக ஆட்சியில் உள்ளூரில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் மட்டுமே அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்பட்டது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்தால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தது.

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்துள்ள நிலையில் கடந்த கடந்த 2ம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெற்றி பயண திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு பெண்கள் இலவசமாக பயணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

இதன் காரணமாக, ஒரு பக்கம் தனியார் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் பெண்கள் அனைவருமே இலவச பேருந்துகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் தனியார் பேருந்துகள் பயணிகளே இல்லாமல் பயணத்தை ரத்து செய்து வருகின்றன. ஒருபக்கம், இதை சமாளிக்க தனியார் பேருந்துகளில் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம் இந்த வெற்றி பயணத் திட்டத்தின் காரணமாக உள்ளூர் வியாபாரம் கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். உதாரணத்திற்கு மதுரையை சுற்றி 40 கிலோமீட்டர் தூரத்தில் சிவகங்கை உள்ளிட்ட பல ஊர்கள் இருக்கிறது. மதுரையில் பொருட்களின் விலை குறைவாக இருந்தாலும் பேருந்து கட்டணம் காரணமாக அவர்கள் உள்ளூரிலேயே பொருட்களை வாங்கி வந்தனர்.

தற்போது அரசு பேருந்து இலவசம் என்பதால் மதுரை சென்று பொருட்களை வாங்குவார்கள். மதுரை மட்டுமல்ல. சேலம், கோவை, திருச்சி, சென்னை, ஈரோடு என தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இது நடக்கும். இதனால் உள்ளூர் வியாபாரம் கடுமையாக பாதிக்கும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஏஐ தரும் தீமைகளையும் ஆபத்துகளையும்" உலகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: சாம் ஆல்ட்மேன்