1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Sam Altman Says World Should Accept Some Risks for Benefits of AI

ஏஐ தரும் தீமைகளையும் ஆபத்துகளையும்" உலகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: சாம் ஆல்ட்மேன்

சாம் ஆல்ட்மேன் கருத்து
செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தின் நன்மைகளை பெற வேண்டுமானால், அதனால் ஏற்படும் சில "தீமைகளையும் ஆபத்துகளையும்" உலகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஆந்த்ரோபிக்  நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டேரியோ அமோடே என்பவரின் தீவிர AI கட்டுப்பாட்டுக் கருத்துக்களிலிருந்து மாறுபட்டுத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தடையின்றித் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஆல்ட்மேன், ஒரே ஒரு ஆராய்ச்சி மையம் மட்டுமே AI-ஐக் கட்டுப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
சைபர் தாக்குதல்கள், மோசடிகள், தவறான பயன்பாடுகள் ஆகியவற்றை முற்றிலும் தடுப்பதாகக் கூறிக்கொண்டு தொழில்நுட்பத்தை முடக்குவது சாத்தியமில்லை என்றும், மனிதர்கள் இந்தத் தொழில்நுட்பம் மூலம் செய்யும் நன்மைகள் தீமைகளை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அதே நேரத்தில், AI தொழில் நிறுவனங்கள் ஆபத்துகளைப் பற்றிப் பொய் சொல்கின்றன என்றும், மனிதகுலத்தின் அழிவுக்கே இது வழிவகுக்கும் என்றும் ஆந்த்ரோபிக் சிஇஓ டேரியோ அமோடே எச்சரித்திருந்தார். தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையே நிலவும் இந்த மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் மோதல்கள் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
 
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
லட்சதீவுகளில் பிட்ரா தீவில் கடற்படை தளம்!.. சீனாவுக்கு செக் வைத்த இந்தியா!...