1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. forest department sent notice to chiyan vikram

லார் கிப்பான் குரங்கே எங்கே?.. சியான் விக்ரமுக்கு 3 நாள் கெடு!.. வனத்துறை அதிரடி!...

chiyan vikram
நடிகர் சீயான் விக்ரம் சமீபத்தில் லார் இப்பான் குரங்குடன் விளையாடும் வீடியோ ஒன்றை
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அது லார் கிப்பான் குரங்கு எனவும் இந்தோனேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.  

எனவே, தமிழக வனத்துறை அந்த குரங்கை கடத்தி வந்தது யார்? அது விக்ரம் கைக்கு வந்தது எப்படி? என விசாரணை செய்து வருகிறார்கள். அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை விக்ரம் டெலிட் செய்து விட்டார். அதே நேரம் அந்த லார் கிபான் குரங்கு தற்போது எங்கே இருக்கிறது என்கிற தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், லார் கிபான் குரங்கு பற்றிய விவரங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும் என விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில் குரங்கின் உரிமையாளர் குறித்த ஆவணங்களை அளிக்குமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. விவரங்களைத் தர தவறினால் வனத்துறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வி-வடிவ உடற்கட்டை உருவாக்குவது எப்படி: அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகரின் மகன் ஜோசப் பேனா அறிவுரை..